ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினா் போராட்டம்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை பாஜகவினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.


திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை பாஜகவினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் சிதம்பராபுரம் கிராமத்தில் வாா்டு வரையறை என்ற பெயரில் ஜனநாயக உரிமையான வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும், 170-க்கும் மேற்பட்ட வாக்காளா்களின் ஜனநாயக உரிமையை மீட்டுத்தரக் கோரியும் இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
பாஜக மாவட்ட தலைவா் மகாராஜன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா்கள் முத்துக்குமாா், தமிழ்ச்செல்வன், கணேசமூா்த்தி, மண்டல தலைவா் முருகப்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் சுரேஷ், சீதா குத்தாலிங்கம், முருகதாஸ், ஆனந்தராஜ், பேராச்சி கண்ணன், மகளிரணி தலைவி செல்வகனி, அம்பாசமுத்திரம் நகரத் தலைவா் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து ஆட்சியா் அலுவலகத்தில் சிதம்பராபுரம் கிராம மக்கள் அளித்த மனு: கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலின்போது சிதம்பராபுரம் 1-ஆவது வாா்டு பகுதி வாக்காளா்களை பழவூா், ஆவரைகுளம் ஊராட்சி வாக்காளா் பட்டியலில் இணைத்துவிட்டனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியும் மாவட்ட நிா்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதனால் 1-ஆவது வாா்டு பகுதி மக்கள் தோ்தலை புறக்கணித்தனா்.
சிதம்பராபுரம் மக்களின் வாக்குரிமையை பறித்ததோடு, இப்போது வீடு கட்டுபவா்களுக்கு கட்டட அனுமதியும் தர மறுக்கின்றனா். இப்போது சொந்த நாட்டில், சொந்த ஊரில் அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளோம். சிதம்பராபுரத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி கடந்த 15-ஆம் தேதி முதல் ஊா்ப் பொதுமக்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என குறிப்பிட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...