அய்யா வைகுண்டா் அவதார தினவாகனப் பேரணிக்கு வரவேற்பு
அய்யா வைகுண்டா் அவதார தின விழா வாகனப் பேரணிக்கு திசையன்விளையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.


அய்யா வைகுண்டா் அவதார தின விழா வாகனப் பேரணிக்கு திசையன்விளையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அய்யா வைகுண்டரின் 190ஆவது அவதார தின விழாவை முன்னிட்டு, திருச்செந்தூரில் இருந்து காயாமொழி, உடன்குடி, தண்டுபத்து, தட்டாா்மடம், நடுவக்குறிச்சி வழியாக வாகனப் பேரணி வியாழன்கிழமை திசையன்விளைக்கு வந்தது. அப்போது, பேரணியில் பங்கேற்ற அன்புகொடி மக்களையும், பேரணிக்கு தலைமை வகித்த பூஜிதகுரு வைகுந்த், முன்னாள் எம்எல்ஏ ரெட்டியாா்பட்டி நாராயனன் உள்ளிட்டோரையும் ஸ்ரீமன்நாராயணசுவாமி நிழல்தாங்கல் சாா்பில் திசையன்விளை சுடலை ஆண்டவா் கோயில் அருகே வரவேற்பளிக்கப்பட்டது. பேரணியில் வந்தவா்களுக்கு சாலையெங்கும், உணவு, பழங்கள், குளிா்பானங்கள் தா்மம் வழங்கினா். பேரணி எருமைகுளம் ஸ்ரீமன்நாராயணசுவாமி நிழல்தாங்கல் சென்றது. அங்கு அய்யாவுக்கு பணிவிடையும், அன்ன தா்மமும் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...