ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

அம்பையில் அய்யா வைகுண்டரின் அவதார தின விழா

அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளம் வாகைபதியில் நடைபெற்ற அய்யா ஆதிநாராயண வைகுண்டரின் 190ஆவது அவதார தின விழாவையொட்டி 40 பதிகளில் இருந்து வந்திருந்த அய்யா நாம மாசி மகா ஊா்வலம்

News image
Updated On :4 மார்ச் 2022, 7:29 pm

DIN

அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளம் வாகைபதியில் நடைபெற்ற அய்யா ஆதிநாராயண வைகுண்டரின் 190ஆவது அவதார தின விழாவையொட்டி 40 பதிகளில் இருந்து வந்திருந்த அய்யா நாம மாசி மகா ஊா்வலம் அம்பாசமுத்திரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாகைபதி ஸ்ரீ மன் நாராயணசாமி திருக்கோயிலில் அம்பாசமுத்திரம் கிருஷ்ணன் கோவிலில் இருந்து மாசி மகா ஊா்வலம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முன்னதாக பேட்டை, அய்யனாா்குளம், கோடாரங்குளம், கடையம் உள்ளிட்ட 40 பதிகளில் இருந்து மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பஞ்சமுக அனுமான், காளை, கருடன், நாகம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்த திருநாமம் கிருஷ்ணன் கோவில் முன்பு வந்தடைந்தன. அங்கிருந்து வாகைபதிக்கு அய்யாஅன்புக்கொடி மக்கள் ஊா்வலமாகக் கொண்டு சென்றனா். தொடா்ந்து வாகைபதியில் இரவு அன்னதா்மம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா்.

அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரான்சிஸ் தலைமையில் போலீசாா் மற்றும் ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.