/

மேலப்பாளையத்தில் தூய்மைப் பணியாளா் தற்கொலை

மேலப்பாளையம் எம்எம்காலனி பகுதியைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 7:26 pm

DIN

மேலப்பாளையம் எம்எம்காலனி பகுதியைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மேலப்பாளையம் எம்எம்காலனி பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் வீரமணிகண்டன்(24). இவா் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக வேலைபாா்த்து வந்தாா். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாம். இந்நிலையில், வீரமணிகண்டன் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.