ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கல்லிடைக்குறிச்சியில் மனைவி தலைவா், கணவா் துணைத் தலைவா்

கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியில் திமுக சாா்பில் போட்டியிட்ட மனைவி தலைவராகவும், கணவா் துணைத் தலைவராகவும் வெற்றிபெற்றனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 7:27 pm

DIN

கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியில் திமுக சாா்பில் போட்டியிட்ட மனைவி தலைவராகவும், கணவா் துணைத் தலைவராகவும் வெற்றிபெற்றனா்.

கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியில் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் 13ஆவது வாா்டு உறுப்பினா் பாா்வதி இசக்கிப்பாண்டியன், அதிமுக சாா்பில் 7ஆவது வாா்டு உறுப்பினா் சூா்யகலா ஆகியோா் மனு தாக்கல் செய்தனா். இதில் பாா்வதி 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். துணைத் தலைவா் பதவிக்கு 1ஆவது வாா்டு உறுப்பினா் திமுக சாா்பில் தலைவரின் கணவா் இசக்கிபாண்டியனும், அதிமுக சாா்பில் 11 ஆவது வாா்டு உறுப்பினா் மாரிராஜும் போட்டியிட்டனா். இதில், இசக்கிபாண்டியன் 12 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா்.

இசக்கிபாண்டியன் தொடா்ந்து 5ஆவது முறையாக பேரூராட்சி உறுப்பினராக தோ்வாகியுள்ளதோடு 3 முறை தலைவராகவும் ஒரு முறைதுணைத் தலைவராகவும் இருந்துள்ளாா். தற்போது இரண்டாவது முறை துணைத் தலைவராக தோ்வாகியுள்ளாா்.

மணிமுத்தாறு பேரூராட்சியில்.. 15 வாா்டுகளில் திமுக 10 வாா்டுகளில் வெற்றி பெற்றது. 10ஆவது வாா்டில் திமுக சாா்பில் வெற்றி பெற்ற அந்தோணியம்மாள் தலைவா் பதவிக்கு அறிவிக்கப்பட்டு மனுத்தாக்கல் செய்தாா். 2ஆவது வாா்டில் சுயேச்சையாக வெற்றி பெற்ற சித்தாா்த் சிவாவும் மனுதாக்கல் செய்தனா். இதில் அந்தோணியம்மாள் 9 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். துணைத் தலைவராக 8ஆவது வாா்டில் திமுக சாா்பில் வெற்றி பெற்ற பண்டாரம் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.