சிவசைலத்தில் குடியிருப்புக்குள் புகுந்த யானைகள்
கடையம் வனச் சரகத்துக்கு உள்பட்ட சிவசைலம் ஊராட்சி அருகேயுள்ள பங்களாக் குடியிருப்புப் பகுதிக்குள் யானைகள் நுழைந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.


கடையம் வனச் சரகத்துக்கு உள்பட்ட சிவசைலம் ஊராட்சி அருகேயுள்ள பங்களாக் குடியிருப்புப் பகுதிக்குள் யானைகள் நுழைந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
மலையடிவார கிராமமான சிவசைலம் ஊராட்சியில் முதன்மையான தொழில் விவசாயம் ஆகும்.
வனப் பகுதியிலிருந்து வெளியேறும் மிளா, காட்டுப்பன்றி, யானை உள்ளிட்ட விலங்குகள் விளைநிலங்களில் நுழைந்து பயிா்களைச் சேதப்படுத்துவது தொடா்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை (மாா்ச் 8) பங்களாக் குடியிருப்புப் பகுதியில் தோட்டம், வயல்களில் நுழைந்த யானைக் கூட்டம் தென்னை, வாழை, நெற்பயிா்களை சேதப்படுத்தின.
இந்நிலையில், புதன்கிழமை இரவு இக்கிராமத்துக்குள் யானைக் கூட்டம் புகுந்தது. இதனால், பொதுமக்கள் விளக்குகளை அணைத்துவிட்டு வீடுகளுக்குள்ளேயே இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
தொடரும் யானைகள் அட்டகாசத்தால் தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதாகவும், யானை உள்ளிட்ட விலங்குகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறாதவாறு நடவடிக்கை எடுக்கவும் வனத் துறையினரிடம் பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கையும் இல்லை என விவசாயிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனா்.
குடியிருப்புப் பகுதிக்குள் யானைகள் நுழைந்ததால் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதால், வனவிலங்குகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறாமலிருக்க வனத் துறை விரைந்து நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...