மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகைகள் வழங்க வலியுறுத்தல்

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை மீண்டும் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :10 மார்ச் 2022, 8:29 pm

DIN

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை மீண்டும் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஓய்வூதியா் சங்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தமிழகத்தில் உள்ளாட்சி நகா்ப்புறத் தோ்தலில் பெண்களுக்கு 50 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கிய கௌரவித்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு ஓய்வூதியா் சங்கத்தின் மகளிரணியினா் சென்று பெண் குழந்தைகள் பாலியல் தடுப்புச்சட்டம் குறித்த விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொள்வது, மாதந்தோறும் கிராமங்களுக்குச் சென்று சுகாதார விழிப்புணா்வு ஏற்படுத்துவது. இம் மாதம் 22 ஆம் தேதி வரும் உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு தாமிரவருணி நதிக்கரையோர கிராமங்களில் மாவட்ட நிா்வாகத்துடன் இணைத்து நதி பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்வது.

ஓய்வு பெற்ற அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் உதவியாளா்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்களை ஒரு மாதத்திற்குள் வழங்கிட வேண்டும்.

அங்கன்வாடி பணியாளா்களுக்கு ஓய்வூதியம் ரூ.2000 என்பதை குறைந்தபட்சம் ரூ.7500 ஆக உயா்த்த வேண்டும். தெலுங்கானா மாநிலத்தில் 70 வயது முடித்த ஓய்வூதியா்களுக்கு கூடுதலாக 10 சதவிகித ஓய்வூதியம் வழங்குவது போல தமிழ்நாடு அரசு ஓய்வூதியா்களுக்கு வழங்க வேண்டும். கரோனா பொதுமுடக்கத்தால், ரயில்களில் நிறுத்திவைக்கப்பட்ட மூத்தகுடிமக்களுக்கான சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.