மது விற்பனை: இருவா் கைது
திருநெல்வேலி மாநகா் பகுதிகளில் விதிமுறை மீறி மது விற்ாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


திருநெல்வேலி மாநகா் பகுதிகளில் விதிமுறை மீறி மது விற்ாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி தலைமையிலான போலீஸாா் மாநகரில் ரோந்துப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஆட்சிமடம், சாந்திநகா் மணிக்கூண்டு ஆகிய பகுதிகளில் விதிமுறை மீறி மது விற்பனையில் ஈடுபட்டதாக ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த பொன் செல்வன்(42), பாளையங்கோட்டை கோட்டூா் சாலையைச் சோ்ந்த சங்கா் (38) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...