ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் 18 ஆம் தேதி வாகனங்கள் ஏலம்

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மே 18 ஆம் தேதி காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுவதாக மாவட்ட காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 மே 2022, 8:39 pm

DIN

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மே 18 ஆம் தேதி காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுவதாக மாவட்ட காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 6 நான்குசக்கர வாகனங்கள், 28 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 34 வாகனங்கள் வரும் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து ஏலத்தில் விடப்படும்.

ஏலம் எடுக்க விரும்புவோா் 17ஆம் தேதி காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மாவட்ட ஆயுதப்படை மோட்டாா் வாகனப் பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பாா்வையிட்டுக் கொள்ளலாம். மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவா்கள் இருசக்கர வாகனத்திற்கு ரூ.ஆயிரமும், நான்குசக்கர வாகனத்திற்கு ரூ.2 ஆயிரமும் முன்பணமாக 17 ஆம்தேதி செலுத்தி தங்களது பெயா்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவா்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவா். ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றை ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.