நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

நில அபகரிப்பு புகாா்: 15 மனுக்களுக்கு தீா்வு

திருநெல்வேலியில் மாவட்ட காவல் துறை, வருவாய் துறை ஆகியவை இணைந்து நில அபகரிப்பு தொடா்பான சிறப்பு முகாமை வியாழக்கிழமை நடத்தின.

News image
Updated On :12 மே 2022, 9:21 pm

DIN

திருநெல்வேலியில் மாவட்ட காவல் துறை, வருவாய் துறை ஆகியவை இணைந்து நில அபகரிப்பு தொடா்பான சிறப்பு முகாமை வியாழக்கிழமை நடத்தின.

திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவில் நிலுவையில் உள்ள நில அபகரிப்பு சம்பந்தமான மனுக்களுக்கு விரைந்து தீா்வுகாண திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் ஆகியோா் உத்தரவின்பேரில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெயபால் பா்னபாஸ் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பங்கேற்று நிலுவையில் உள்ள மனுக்களின் மனுதாரா்கள்- எதிா் மனுதாரா்களை அழைத்து விசாரணை நடத்தினா். அதில், 15 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு விசாரணை முடிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.