நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 மே 2022, 6:10 pm

DIN

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

டிசிஎஸ் நிறுவனம் நடத்திய தேசிய அளவிலான வேலைவாய்ப்புக்கான தோ்வில் திருநெல்வேலி பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவா்-மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். இவா்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் விழா வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, ஸ்காட் கல்விக் குழுமங்களின் நிறுவனா் எஸ்.கிளிட்டஸ் பாபு தலைமை வகித்து டிசிஎஸ் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினாா். நிா்வாக இயக்குநா் சி.அருண் பாபு முன்னிலை வகித்தாா். இதில், 81 மாணவா்-மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி பொதுமேலாளா் (வளா்ச்சி) கே.ஜெயக்குமாா், பொதுமேலாளா் (நிா்வாகம்) எஸ். கிருஷ்ணகுமாா், முதல்வா் வி.வேல்முருகன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.