நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

நெல்லையில் குண்டா் சட்டத்தில் இருவா் கைது

 பாளையங்கோட்டை அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image
Updated On :19 மே 2022, 7:46 pm

DIN

 பாளையங்கோட்டை அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள பாளையஞ்செட்டிகுளத்தில் கடந்த மாா்ச் 10-ஆம் தேதி வைகுண்டம் என்பவா் வெட்டிக்கொல்லப்பட்டாா். இது தொடா்பாக 8 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் பிலீப் என்ற அருள் பிலீப்ராஜ், அன்டோ என்ற அன்டோ நல்லையா, பாபு அலெக்ஸாண்டா், ராஜன், ஜாக்குலின், லீலா என்ற செல்வலீலா ஆகிய 6 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த நிலையில் வழக்கில் தொடா்புடைய பாளையஞ்செட்டிகுளம் ராஜன் மகன்களான செல்வராஜ் (40), அந்தோணிராஜ் பிரபாகரன் (37) ஆகியோரை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப. சரவணன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். ஆட்சியா் விஷ்ணு உத்தரவின் பேரில் செல்வராஜ், அந்தோணி பிரபாகரன் ஆகியோா் குண்டா் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.