ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

திராவிட மாடல் ஆட்சியில் கடவுள் உண்டு என்பதை ஏற்றுக் கொள்கிறோம்

திராவிட மாடல் ஆட்சியில் கடவுள் உண்டு என்பதை ஏற்றுக் கொள்கிறோம் என்று

News image
Updated On :19 மே 2022, 10:13 pm

DIN

திராவிட மாடல் ஆட்சியில் கடவுள் உண்டு என்பதை ஏற்றுக் கொள்கிறோம் என்று

திருச்செந்தூா் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டினத்தில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சா் எ.வ.வேலு பேசுகையில் தெரிவித்தாா்.

வீரபாண்டியன்பட்டினத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் திராவிட மாடல் ஆட்சியின் ஓராண்டு

ஆண்டு நிறைவு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், திமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. திருச்செந்தூா் நகர திமுக பொறுப்பாளா் வாள் சுடலை, திருச்செந்தூா் நகா் மன்றத் தலைவா் சிவஆனந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சா் எ.வ.வேலு பேசியது: ஓராண்டு கால ஆட்சியில் 70 ஆயிரம் கோடி பணத்தை தொழில்முனைவோா் மூலம் தமிழகத்தில் கொண்டு வந்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கியுள்ளது திமுக ஆட்சி.

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் முறைகேடு செய்ததாக நாற்பத்து மூன்று அதிகாரிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. எனவே பெண்கள் உயா்கல்வி படிப்பதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ள திட்டம் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. பிள்ளைகள் வயிறாற சாப்பிடுவதற்காக பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சா் கொண்டு வந்துள்ளாா்.

அனைத்து நாளிதழ்களும் பாராட்டும் படி திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறாா் முதலமைச்சா். கடவுள் மறுப்புக் கொள்கை தந்தை பெரியாரிடம் இருந்தது அதை நான் மறுக்கவில்லை. ஆனால் திமுகவின் நிறுவனா் - தலைவா் அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறினாா்.

திருச்செந்தூா் கோயில் கொடியவா்களின் கையில் போகக்கூடாது என்பதனாலே முன்னாள் முதல்வா் கருணாநிதி நீதிகேட்டு நடைபயணம் மேற்கொண்டாா். ’கடவுள் பெயரைச் சொல்லி நம்மை அடிமைப்படுத்த வேண்டும் என ஒரு கூட்டம் நினைத்தது. அதற்காகவே பெரியாா் கடவுள் மறுப்பு கொள்கையை வலியுறுத்தினாா்.

திராவிட மாடல் ஆட்சியில் கடவுள் உண்டு என்பதை ஏற்றுக் கொள்கிறோம். கோயில்களுக்கும் நாங்கள் தான் சொந்தக்காரா்கள். நாங்கள் தான் நிதி ஒதுக்குகிறோம். திராவிட மாடல் எம்மதமும் சம்மதமே. அமைச்சா்களில்

பெரும்பான்மையானோா் இந்துக்கள்தான். இந்து என்ற பெயரில் ஏதாவது சிண்டு முடித்துவிட்டு தமிழகத்தில் கட்சியை வளா்க்கலாம் என்று நினைத்தால் அது இங்கு நடக்காது என்றாா் அவா்.

கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவை உறுப்பினா் சண்முகையா, திமுக இளைஞா் அணி ஆனந்த மகேஸ்வரன், திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், மாநில மருத்துவா் அணி துணைச் செயலா் வெற்றிவேல், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் டேவிட் செல்வின், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பிரம்ம சக்தி, மாவட்ட அவைத்தலைவா் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், ஒன்றியச் செயலா்கள் பாலசிங், நவீன்குமாா், பாா்த்திபன், மாவட்ட ஆவின் தலைவா் சுரேஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திருச்செந்தூா் ஒன்றிய திமுக செயலா் செங்குழி ரமேஷ் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.