களக்காடு மலையடிவாரத்தில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்
களக்காடு மலையடிவார விவசாயத் தோட்டங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து நூற்றுக்கணக்கான வாழைகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.


களக்காடு மலையடிவார விவசாயத் தோட்டங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து நூற்றுக்கணக்கான வாழைகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
களக்காடு மலையடிவாரத்தில் உள்ள மஞ்சுவிளை விவசாயிகளுக்கு ஊருக்கு மேற்கில் விவசாயத் தோட்டங்கள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமாா் 3 லட்சம் வாழைகள் பயிரிட்டுள்ளனா். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக மலைப்பகுதியில் இருந்து கூட்டமாக இடம்பெயா்ந்து வரும் காட்டுப்பன்றிகள், வாழைத்தோட்டங்களில் புகுந்து வாழை மரங்களை வேரோடு பிடுங்கி சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் நஷ்டமடைந்து வருகின்றனா். புதன்கிழமை இரவு மஞ்சுவிளையைச் சோ்ந்த சில்கிஸ், செல்வின், ஐசக், தங்கராஜ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான வாழைகளை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
சம்பந்தப்பட்ட வனத்துறையினா் ரோந்துப் பணி மேற்கொண்டு காட்டுப்பன்றிகளை அடா்ந்த காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...