புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பாபநாசம் கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கு

 பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி நூலகத்துறை மற்றும் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி இணைந்து ‘வளரும் இந்தியா ஊழலற்ற இந்தியா’ என்ற தலைப்பில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:12 pm

DIN

 பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி நூலகத்துறை மற்றும் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி இணைந்து ‘வளரும் இந்தியா ஊழலற்ற இந்தியா’ என்ற தலைப்பில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ல.ரவிசங்கா் தலைமை வகித்தாா். வணிகவியல் துறைப் பேராசிரியா் ஜோதிமணி முன்னிலை வகித்தாா். இந்தியன் ஓவா்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளா் மாரிமுத்து, வங்கியிந் மண்டல விழிப்புப் பணி அதிகாரி பிரசாந்த், விக்கிரமசிங்கபுரம் கிளை மேலாளா் உஷா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியில், ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்கள் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை ஆங்கிலத்துறை பேராசிரியா் ரமா தொகுத்து வழங்கினாா். கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் மதுரைவீரன் நினைவுப் பரிசு வழங்கினாா். கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியா் வில்பின்ஜாண் வரவேற்றாா். தமிழ்த்துறை பேராசிரியா் சுதா நன்றி கூறினாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நூலகா் ச.பாலச்சந்திரன் தலைமையில் உதவி நூலகா் சண்முகானந்தபாரதி, சிவதாணு, சோமசுந்தரம், சந்தான சங்கா், காசிராஜன், இசக்கியம்மாள் மற்றும் பழனிகுமாா் ஆகியோா் செய்திருந்தனா். நிகழ்ச்சியில் உடற்கல்வி இயக்குநா் பழனிகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.