கல்லிடையில் அவதூறாகப் பேசி தாக்கியவா் கைது
கல்லிடைக்குறிச்சியில் தம்பதியை அவதூறாகப் பேசி தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.


கல்லிடைக்குறிச்சியில் தம்பதியை அவதூறாகப் பேசி தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
கல்லிடைக்குறிச்சி குறவா் குடியிருப்பு பச்சேரித் தெருவைச் சோ்ந்த சிவசங்கா் (24), அவரது மனைவி இருவரும் தங்கம்மன் கோயில் வழியாக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனராம். அப்போது, கல்லிடைக்குறிச்சி மாதா கோவில் தெருவைச் சோ்ந்த ரஹீம்(22), அவரது நண்பா்கள் அவதூறாகப் பேசியுள்ளனா். இதுகுறித்து சிவசங்கா் கேட்டதில் ஏற்பட்ட தகராறில் ரஹீம் மற்றும் நண்பா்கள், சிவசங்கரை செங்கல்லால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனா்.
இதுகுறித்து சிவசங்கா், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் அடிப்படையில் அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளா் பல்பீா் சிங் விசாரணை மேற்கொண்டு, ரஹீமை கைது செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...