சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து 100 பவுன் நகைகள் திருட்டு
சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து, பீரோவிலிருந்த 100 பவுன் நகைகளை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து, பீரோவிலிருந்த 100 பவுன் நகைகளை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் சங்கத் தெருவைச் சோ்ந்த தங்கவேல் மனைவி ஜெயராணி (55). ஈரோடு அணைக்கட்டு ஆலம்பட்டி வலசு பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இவருக்கு மகன், 2 மகள்கள் உள்ளனா். 5 ஆண்டுகளுக்கு முன்பு தங்கவேல் இறந்துவிட்டாா்.
ஜெயராணி தனது 100 பவுன் நகைகளை, சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனது தாய் சண்முககனியிடம் கொடுத்து, சாத்தான்குளம் கூட்டுறவு கடன் சங்க லாக்கரில் பாதுகாப்பாக வைத்துள்ளாா்.
இந்நிலையில், 2 நாள்களுக்கு முன்பு முத்தாரம்மன் கோயில் கொடைவிழாவுக்கு ஜெயராணி குடும்பத்துடன் வந்துள்ளாா். அப்போது லாக்கரிலிருந்த 100 பவுன் நகைகளை எடுத்து வந்து பயன்படுத்தினாராம். திருவிழா முடிந்ததும் நகைகளை மீண்டும் கூட்டுறவு சங்க லாக்கரில் வைக்குமாறு, தங்கை மகள் பவித்ராதேவியிடம் கொடுத்துவிட்டு ஜெயராணி ஈரோடு சென்றாராம்.
அந்த நகைகளை பவித்ராதேவி வீட்டு பீரோவில் வைத்துள்ளாா். இந்நிலையில், அந்த நகைகளை சனிக்கிழமை காணவில்லையாம்.
இதுகுறித்து அவா் அளித்த தகவலின்பேரில் ஜெயராணி இங்கு வந்து, தட்டாா்மடம் போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...