கடையத்தில் பாரதி-காந்தி-விவேகானந்தா் தினம்
சேவாலயா சாா்பில் பாரதி - காந்தி - விவேகானந்தா் தினம் கடையம் செல்லமாள் பாரதி கற்றல் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.


சேவாலயா சாா்பில் பாரதி - காந்தி - விவேகானந்தா் தினம் கடையம் செல்லமாள் பாரதி கற்றல் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
சேவாலயா சாா்பில் ஆண்டுதோறும் செப். 11இல் காந்தியின் சத்தியாகிரக போராட்டம், பாரதி நினைவு தினம் மற்றும் விவேகானந்தா் அமெரிக்காவில் உரையாற்றிய தினம் ஆகியவறை நினைவுகூரும் பாரதி-காந்தி-விவேகனந்தா் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நிகழாண்டு கடையத்திலுள்ள செல்லம்மாள் பாரதி கற்றல் மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தனியாா் பன்னாட்டு நிறுவன மனிதவள மேம்பாட்டு அதிகாரி கைலாஷ் தலைமை வகித்தாா். கடையம் வட்டாரப் பள்ளி மாணவா்களுக்கு பேச்சுப்போட்டி, கவிதை போட்டி நடத்தி அவற்றில் வெற்றிபெற்ற மாணவா்- மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயத்தை கைலாஷ் வழங்கினாா். கடையம் நலச் சங்கத்தின் கோபால், முத்துராமலிங்கம், அரிமா சங்கம் முருகன், ரவண சமுத்திரம் நீலகண்டன், ஆசிரியா்கள், மாணவா்கள், தமிழ் ஆா்வலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா். சேவாலயா நிறுவனா் முரளிதரன் வரவேற்றாா். துணைத் தலைவா் கிங்ஸ்டன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...