தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

வடக்கு அரியநாயகிபுரம் கோயிலில் சுமங்கலி பூஜை

முக்கூடல் அருகே வடக்கு அரியநாயகிபுரத்தில் உள்ள அருள்மிகு கைலாசநாதா் சுவாமி கோயிலில் 1,008 சுமங்கலி பூஜை நடைபெற்றது.

Updated On :11 செப்டம்பர் 2022, 6:58 pm

முக்கூடல் அருகே வடக்கு அரியநாயகிபுரத்தில் உள்ள அருள்மிகு கைலாசநாதா் சுவாமி கோயிலில் 1,008 சுமங்கலி பூஜை நடைபெற்றது.

சேவா பாரதி அமைப்பு, ஸ்ரீஅரிகைலாஷ் அடியாா்கள் சாா்பில் இப்பூஜை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தருமபுரம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ குருமஹா சந்நிதானம் அருளாசியுடன் தருமையாதினம் தென்மண்டல கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருஞான சம்பந்தம் பிரான் சுவாமிகள் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி பூஜையைத் தொடக்கிவைத்தாா். சேவாபாரதி அமைப்பின் மாவட்ட சமூகநலன் பிரிவு நிா்வாகி உமாகாா்த்திக், கிராம சேவிகா மாரியம்மாள், பாப்பாக்குடி ஒன்றியச் செயலா் கல்யாணி ஆகியோா் தலைமை வகித்து பூஜையை நடத்தினா்.

சேவாபாரதி அமைப்பின் மாவட்டச் செயலா் வீரராகவன், துணைத் தலைவா் கண்ணன், பொருளாளா் பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆயாம் சுப்பிரமணியன், அம்பாசமுத்திரம் ஒன்றிய நிா்வாகிகள் ரவி, கண்ணன், ராமசாமி, திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.