திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா நடிக்கும் காலனி படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

News image

ராதிகா (காலனி முதற்பார்வை போஸ்டர்) - X

Updated On :13 ஏப்ரல் 2026, 12:57 pm

கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா நடிக்கும் காலனி படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

நயன்தாரா நடித்த அறம் படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் கோபி நயினார். இவர் அடுத்ததாக கருப்பர் நகரம் என்கிற படத்தை இயக்கும் பணிகளை மேற்கொண்ட நிலையில் படம் கைவிடப்பட்டது.

தொடர்ந்து, இயக்குநர் வெற்றி மாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடித்த மனுஷி என்கிற படத்தை இயக்கினார். அரசியல், பெண்ணிய சிந்தனை கொண்ட படமான இது தணிக்கை வாரியத்தில் சமர்பிக்கப்பட்டு, சென்சார் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

இதனைத் தொடர்ந்து, கோபி நயினார் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘காலனி’. ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் அஞ்சலி நாயர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோ நடிக்கின்றனர்.

’தேனிசைத் தென்றல்’ தேவா இசையமைக்கிறார். அதிதி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் முதற்பார்வை போஸ்டர் மற்றும் விடியோ இன்று வெளியாகியுள்ளது.

விளிம்புநிலை மக்களின் வலியைப் பேசும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் விரைவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

காலனி முதற்பார்வை போஸ்டர்

காலனி முதற்பார்வை போஸ்டர்

Summary

Radhika under the direction of Gopi Nainar... Colony — First Look Poster Released!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.