நெல்லை: ஜன்னல் வழியாக பெண்களை படம் பிடித்தவருக்கு அடி, உதை

நெல்லையில் வீட்டு ஜன்னல் வழியாக பெண்களை ஆபாசமாக படம் பிடித்த ஆசாமிக்கு பொதுமக்கள்  அடிக்கும் விடியோ சமூகவலைத் தளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நெல்லை: நெல்லையில் வீட்டு ஜன்னல் வழியாக பெண்களை ஆபாசமாக படம் பிடித்த ஆசாமிக்கு பொதுமக்கள்  அடிக்கும் விடியோ சமூகவலைத் தளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை: நெல்லை பாளையங்கோட்டை ராஜேந்திரன் நகரைச் சேர்ந்த பால் ராபின்சன் என்பவர் பெருமாள்புரம் பகுதியில் உள்ள பல்வேறு வீடுகளில் இரவு நேரங்களில் சென்று வீட்டின் ஜன்னல் வழியாக பெண்களை ஆபாசமாக படம் படிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பால் ராபின்சன் வழக்கம்போல் பெருமாள்புரம் பகுதியில்  உள்ள வீடு ஒன்றில் பெண்களை தனது மொபைலில் ஆபாசமாக படம் பிடித்த போது  மாட்டிக் கொண்டார். அவரை பிடித்த பொதுமக்கள் அடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக பெருமாள்புரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பால் ராபின்சனை கைது செய்தனர். மாநகரின் முக்கிய பகுதியில் இதுபோன்று பெண்களுக்கு எதிராக நடைபெற்ற இந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது. விசாரணையில், பால் ராபின்சன் பல நாள்களாக இந்த வேலையில் ஈடுபட்டுதும் அவரது செல்லிடைபேசியில்  50-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச விடியோக்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் பால் ராபின்சனை அப்பகுதி மக்கள் பிடித்து, அடிக்கும் விடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிறது. இந்த விடியோவில் பால் ராபின்சனை பொதுமக்கள் சூழ்ந்தபடி அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன்பிறகே அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com