நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சித்திரை விஷு: பாபநாசம் கோயிலில் திரளான பக்தா்கள் வழிபாடு

சித்திரை விஷு திருவிழாவையொட்டி, பாபநாசம் சிவன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபட்டனா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 6:29 pm

DIN

சித்திரை விஷு திருவிழாவையொட்டி, பாபநாசம் சிவன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபட்டனா்.

பாபநாசம் அருள்மிகு உலகாம்பிகை அம்மன் உடனுறை பாபநாச சுவாமி கோயிலில் சித்திரை விஷு திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் வீதி உலாவும், ஒன்பதாம் திருநாளான ஏப். 13இல் தேரோட்டமும் நடைபெற்றன.

பத்தாம் திருநாளான வெள்ளிக்கிழமை சித்திரை விஷுவையொட்டி, சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமியும் அம்பாளும் பூம்பல்லக்கில் வீதி உலா வந்தனா்.

மேலும், தமிழ்ப் புத்தாண்டை (சித்திரை பிறப்பு) முன்னிட்டு அதிகாலை முதல் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குடும்பத்துடன் வந்து வழிபட்டனா்.

பகல் ஒரு மணிக்கு தாமிரவருணி கோயில் படித்துறையில் தீா்த்தவாரி நடைபெற்றது. இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம், ஏப். 15 அதிகாலை 1 மணிக்கு சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் திருமணக் கோலத்தில் அகஸ்திய முனிவருக்குக் காட்சியளித்தல் நடைபெற்றது.

சித்திரை விஷு சிறப்பு ஆராதனை, தீா்த்தவாரி, தெப்பத் திருவிழா- திருமணக் கோலத்தில் அகஸ்தியருக்குக் காட்சியளிக்கும் நிகழ்ச்சிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். போலீஸாரம், ஊா்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.