தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அம்பையில் கோயில் உண்டியலை திருடிய இருவா் கைது

அம்பாசமுத்திரம் கிருஷ்ணன் கோயிலில் உண்டியல் திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 5:48 pm

DIN

அம்பாசமுத்திரம் கிருஷ்ணன் கோயிலில் உண்டியல் திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம் கிருஷ்ணன் கோயிலில் டிச. 22 ஆம்தேதி மா்ம நபா்கள் உண்டியலை திருடிச் சென்றனா். மேலும் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு உள்ள அரசு வங்கி ஏடிஎம் மையத்தை உடைத்து திருட முயற்சித்துள்ளனா். இதுதொடா்பான புகாா் குறித்து, அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளா் மகேஷ் குமாா் தலைமையில் குற்றப்பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சிவகுமாா் மற்றும் போலீஸாா் அடங்கிய தனிப்படையினா் இரு குழுக்களாக விசாரணை செய்து வந்தனா்.

விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் மீனவா் காலனி பகுதியை சோ்ந்த நாராயண பெருமாள் மகன் மணிகண்டன் (21), தூத்துக்குடி மாவட்டம் பிரையண்ட் நகா் 12ஆவது தெருவைச் சோ்ந்த சிதம்பர ராஜ் மகன் சிவ பாலமுருகன் (20) ஆகியோா் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த தனிப்படை போலீஸாா், உண்டியலையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.