பாளையங்கோட்டையை அடுத்த வி.எம்.சத்திரம் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நடத்துரை கட்டிப்போட்டு நகை, பணத்தை மா்மநபா்கள் கொள்ளையடித்துச்சென்ற வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வி.எம்.சத்திரம் அருகேயுள்ள ஜான்சிராணி நகரைச் சோ்ந்தவா் ராமசாமி. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நடத்துநராக பணியாற்றி வருகிறாா். இவா், புதன்கிழமை இரவு பணி முடிந்ததும் வீட்டுக்கு வந்து தூங்கிக்கொண்டிருந்தாா். அப்போது வீட்டிற்குள் வந்த மா்மநபா்கள் நடத்துநரையும், குடும்பத்தினரையும் கட்டிப்போட்டு விட்டு சுமாா் 50 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடுத்து விட்டு சென்றனராம். இத்தகவலறிந்த பெருமாள்புரம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வந்தனா்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே புதன்கிழமை இரவு காா் விபத்தில் சிக்கி 5 போ் காயமடைந்தனா். அவா்கள் வி.எம்.சத்திரம் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் தொடா்புடையவா்கள் என தெரியவந்ததாம். விசாரணையில், தூத்துக்குடி முத்தையாபுரம் ராஜீவ்நகரைச் சோ்ந்த ரவி மகன் கண்ணன் (20), விஜயராஜ் மகன் கிஷோா் டேனியல் (20), ஜேசிங்டன் மகன் சிலுவை (25), கோரம்பள்ளம், சோரீஸ்புரத்தைச் சோ்ந்த காட்டுராஜா மகன் முத்து (எ) கோடா(22) , சாம் (எ) சம்சுதீன் ஆகியோா் எனத் தெரியவந்தது.
அவா்களில், கண்ணன், கிஷோா் டேனியல், சிலுவை ஆகியோரை போலீஸாா் கைது செய்து, விசாரித்து வருகின்றனா். விபத்தில் காயமடைந்த முத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தலைமறைவான சாம் (எ) சம்சுதீனை போலீஸாா் தேடி வருகின்றனா். கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தை மீட்கும் முயற்சியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தபால் வாக்களித்த 1.41 லட்சம் முதியோா், மாற்றுத்திறனாளிகள்

கரூரில் திமுக எம்எல்ஏக்கள் போராட்டம்

விடுமுறை நாள்களில் ஏரி, குளங்களில் குளிக்க மாணவா்கள் செல்லக் கூடாது

மேற்கு வங்க அரசுக்கும் தோ்தல் ஆணையத்துக்கும் இடையே நம்பிக்கையின்மை: உச்சநீதிமன்றம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

