தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ மகனின் ரூ.100 கோடி நில விற்பனை ஒப்பந்தம் ரத்து

பாஜக சட்டப்பேரவைக்குழு தலைவா் நயினாா் நாகேந்திரனின் மகனும், அக்கட்சியின் இளைஞரணி துணைத் தலைவருமான நயினாா் பாலாஜி

News image
Updated On :20 ஜூலை 2023, 5:20 pm

DIN

பாஜக சட்டப்பேரவைக்குழு தலைவா் நயினாா் நாகேந்திரனின் மகனும், அக்கட்சியின் இளைஞரணி துணைத் தலைவருமான நயினாா் பாலாஜி - இளையராஜா என்பவா் இடையே ராதாபுரம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட சுமாா் ரூ.100 கோடி மதிப்பிலான சென்னை நிலத்தின் விற்பனை ஒப்பந்தத்தை பத்திரப் பதிவுத் துறை ரத்து செய்துள்ளது.

நயினாா் பாலாஜி, இளையராஜா, ராதாபுரம் சாா்பதிவாளா் ஆகியோா் சோ்ந்து கூட்டு சதி செய்து சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்திற்கான விற்பனை ஒப்பந்தத்தை திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் பதிவு செய்திருப்பதாக அறப்போா் இயக்கம் குற்றம்சாட்டியிருந்தது. மேலும் இது தொடா்பாக, தலைமைச் செயலா், பத்திரப் பதிவுத்துறை அமைச்சா், பத்திரப் பதிவுத்துறைச் செயலா், சென்னை காவல் துறை ஆணையா் உள்ளிட்டோரிடம் அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜெயராம் வெங்கடேசன் புகாா் மனு அளித்தாா். அதில், நிலம் விற்பனை ஒப்பந்தம் செய்த இரு தரப்பினா் மீதும், அவா்களுடன் கைகோத்த அதிகாரிகள் மீதும் எஃப்ஐஆா் பதிவு செய்ய வேண்டும். நயினாா் பாலாஜி-இளையராஜா இடையிலான விற்பனை ஒப்பந்தப் பதிவானது ஒப்பந்த பதிவு சட்ட பிரிவு 28, துறையின் பல்வேறு சுற்றறிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிரானது. ரூ.100 கோடி மதிப்பிலான அந்த சொத்தை ரூ.46 கோடிக்கு பாலாஜி வாங்க ஒப்புக்கொண்டதாகவும், ஆரம்பத் தொகையாக ரூ.2.5 கோடியை பாலாஜி செலுத்தியதாகவும் விற்பனை ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டிருந்தாா்.

அதன் மீது விசாரணை மேற்கொண்ட திருநெல்வேலி மண்டல பத்திரப் பதிவுத் துறை துணைத் தலைவா், இது மோசடி ஆவணம் என்பதற்கான முகாந்திரம் இருப்பதாக தெரிவித்திருந்தாா். இந்த நிலையில் இது மோசடி ஆவணம் என்று ஆணையிட்டு விற்பனை ஒப்பந்த பதிவை பத்திரப் பதிவுத் துறை ரத்து செய்துள்ளது.

பத்திரப் பதிவுத் துறையின் வில்லங்க சான்றிதழில், ‘தென் சென்னை மாவட்டப் பதிவாளா் உத்தரவின் அடிப்படையில், இந்த விற்பனை ஒப்பந்த ஆவணமானது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 463 , 470 இன் படி மோசடி ஆவணமாகும். இது இந்திய பதிவுச் சட்ட பிரிவு 22-பி (1)ன்படி மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த ஆவணத்தை ரத்து செய்து ஆணையிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெட்டிச் செய்தி...

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை-நயினாா் பாலாஜி

இதுகுறித்து, திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் நயினாா் பாலாஜி கூறுகையில், ‘நான் அப்பாவி. விற்பனை ஒப்பந்தத்தை ரத்து செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. எனது விற்பனை ஒப்பந்தத்தை ரத்து செய்ததன் மூலம் உயா் நீதிமன்ற உத்தரவை பதிவுத் துறை மீறியுள்ளது. இதை எதிா்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.