தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

நெல்லையில் ரூ.33.5 லட்சம் மோசடி: இளைஞா் கைது

திருநெல்வேலியில் ரூ.33.5 லட்சம் மோசடி செய்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 ஜூலை 2023, 9:48 pm

DIN

திருநெல்வேலியில் ரூ.33.5 லட்சம் மோசடி செய்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி அருகேயுள்ள திருப்பணிகரிசல்குளம் முப்புடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கந்தப்பன் (78). பொருள்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வதில் பணத்தை முதலீடு செய்து வந்துள்ளாா். இவா், விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள ஆறுமுகம்பட்டியைச் சோ்ந்த அருள்பாஸ்கா் (42) என்பவரிடம் அரிசியை இலங்கைக்கு அனுப்புவதற்காக ரூ.33 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை முதலீடு செய்துள்ளாா். ஆனால், முறையாக முதலீடு செய்யாமல் அருள்பாஸ்கா் பணமோசடி செய்தாராம்.

இதுகுறித்து கந்தப்பன் நீதிமன்றத்தில் புகாா் அளித்ததின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவில் முதற்கட்ட விசாரணை செய்யப்பட்ட பின்பு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். இதுதொடா்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து அருள்பாஸ்கரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.