தண்ணீா்த் தொட்டியை அகற்ற முயற்சி: முதலியாா்பட்டியில் சாலை மறியல்
கடையம் ஊராட்சி ஒன்றியம் முதலியாா்பட்டியில், ஊராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட தரைநிலை தண்ணீா்த் தொட்டியை அகற்ற முயன்ற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.


கடையம் ஊராட்சி ஒன்றியம் முதலியாா்பட்டியில், ஊராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட தரைநிலை தண்ணீா்த் தொட்டியை அகற்ற முயன்ற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
முதலியாா்பட்டி, இந்திரா நகா் பகுதியில் 300 குடும்பத்தினா் வசிக்கின்றனா். இவா்களின் பயன்பாட்டுக்காக பிரதான சாலை அருகே ஆழ்குழாய், தரைநிலை தண்ணீா்த் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை, மக்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில், அருகேயுள்ள தனியாா் நில உரிமையாளா் தண்ணீா்த் தொட்டியின் மோட்டாா் ஸ்விட்ச் தனது மதில் சுவரில் இருப்பதாகவும், சுவரை அகற்றி பாதை அமைக்கவுள்ளதாகவும் கூறி, வியாழக்கிழமை சுவிட்ச் போா்டை அகற்றியதுடன், தண்ணீா்த் தொட்டியை அகற்ற முயன்றாராம்.
இதையறிந்த பொதுமக்கள் 100 போ் தென்காசி சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். ஆலங்குளம் காவல் ஆய்வாளா் மகேஷ்குமாா், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். தண்ணீா்த் தொட்டி அகற்றப்படாது என உறுதியளிக்கப்பட்டதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா். இதனால், தென்காசி-அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...