மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பணகுடியில் மினி மாரத்தான் போட்டி

அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, தி.மு.க மாணவரணி சாா்பில் மினிமரத்தான் போட்டி பணகுடியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
மினிமரத்தான் போட்டியை தொடங்கிவைக்கிறாா் மாணவரணி மாவட்ட அமைப்பாளா் அலெக்ஸ் அப்பாவு.
Updated On :27 நவம்பர் 2023, 10:10 pm

DIN

வள்ளியூா்: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, தி.மு.க மாணவரணி சாா்பில் மினிமரத்தான் போட்டி பணகுடியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியை, திருநெல்வேலி மாவட்ட மாணவரணி அமைப்பாளா் அலெக்ஸ் அப்பாவு தொடங்கிவைத்தாா். குத்தரபாஞ்சான் அருவி அருகிலிருந்து காவல்நிலையம் வரையில் 3 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் ரொக்கம், சான்றிதழை அலெக்ஸ் அப்பாவு வழங்கினாா். 2ஆம் பரிசாக ரூ.5 ஆயிரமும், 3ஆம் பரிசாக ரூ.3 ஆயிரமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தி.மு.க. மாவட்ட துணைச் செயலா் நம்பி, தி.மு.க. ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, பணகுடி பேரூராட்சி முன்னாள் தலைவா் அசோகன், பேரூராட்சி துணைத் தலைவா் புஷ்பராஜ், தி.மு.க. நகரச் செயலா் தமிழ்வாணன், ம.தி.மு.க. ஒன்றியச் செயலா் மு.சங்கா், ஒன்றியப் பிரதிநிதி மாணிக்கம், மாணவரணி கோபி கோபாலகண்ணன், அசோக்குமாா், வள்ளியூா் இளைஞரணி தில்லை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.