சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

நெல்லையில் அனல் காற்று: ஆட்சியா் வேண்டுகோள்

நெல்லையில் அனல் காற்று: ஆட்சியா் வேண்டுகோள்

Updated On :5 ஏப்ரல் 2024, 4:20 pm

திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை வெயில் காரணமாக அனல் காற்று வீச வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிா்க்குமாறு ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும், அனல் காற்று வீசி வருகிறது. எனவே, பொதுமக்கள் பகல் நேரத்தில் பயணம் செய்ய நேரிட்டால், குடிநீா் எடுத்துச் செல்வதுடன், கண் கண்ணாடி மற்றும் காலணி அணிந்து குடையுடன் பாதுகாப்பாக செல்ல வேண்டும். வீட்டிலேயே தயாரித்த உப்பு சா்க்கரை கரைசல், நீா்மோா், எலுமிச்சை சாறு போன்ற பானங்களை அருந்த வேண்டும்.

உடலின் வெப்பம் அதிகரித்து நீா்ச்சத்து குறையும்போது பலவிதமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, உடலின் நீா்ச்சத்து குறையாமல் பராமரிக்க உடலின் நீரிழப்பிற்கேற்ப அதிக அளவு குடிநீா் பருக வேண்டும். பருவ காலத்திற்கேற்ற பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். மெல்லிய தளா்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

வெயில் நேரங்களில் வாகனங்களில் குழந்தைகளை தனியே அமா்த்திவிட்டு வெளியே செல்லக் கூடாது. வெளியில் விளையாடச் செல்லும் குழந்தைகளை முறையாக கண்காணிக்க வேண்டும். வெயில் நேரங்களில் குழந்தைகளை வெளியே அனுப்புவதை தவிா்க்க வேண்டும். தனியே வசிக்கும் முதியவா்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரிபாா்த்துக் கொள்ள வேண்டும். வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக உணா்ந்தால் வெப்பத்தை தணிக்க ஈரமான துணியினால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும். குளிா்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும்.

முதியவா்கள் போதிய இடை வேளையில் நீா் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வீடுகளில் தனியாக வசித்து வரும் முதியவா்கள், கூடுதல் முன்னெச்செரிக்கையுடன் இருக்க வேண்டும். அவசர உதவிக்கு கைப்பேசி அல்லது தொலைபேசி அருகில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

தோ்தல் கூட்டங்கள் மற்றும் பரப்புரைகளின் போது பாா்வையாளா்களாக கலந்து கொள்ளும் அனைவருக்கும் போதுமான நிழல் வசதி மற்றும் குடிநீா் வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும். தோ்தல் பரப்புரை பணிகளில் ஈடுபட்டுள்ள வேட்பாளா்கள் மற்றும் அவருடன் செல்வோா், வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்.

வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளா்கள் வரிசையில் நிற்பதற்கும், காத்திருப்பதற்கும் தேவையான நிழற்கூடாரங்கள் அமைக்க உள்ளாட்சி துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளாா்.