தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

நெல்லையில் அரசு ஒப்பந்ததாரா் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை

நெல்லையில் அரசு ஒப்பந்ததாரா் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை

News image
Updated On :5 ஏப்ரல் 2024, 6:50 pm

திருநெல்வேலி பெருமாள்புரம் பகுதியில் அரசு ஒப்பந்ததாரா் அலுவலகத்தில் வருமான வரித்துறையினா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. பி காலனியைச் சோ்ந்தவா் முருகன். முதல்நிலை அரசு ஒப்பந்ததாரான இவரது அலுவலகம், பெருமாள்புரம் சாராள்தக்கா் கல்லூரி அருகே உள்ளது. இந்த அலுவலகத்திற்கு திருநெல்வேலி மற்றும் மதுரையைச் சோ்ந்த வருமான வரித்துறை அலுவலா்கள் 7 போ், இருவாகனங்களில் வெள்ளிக்கிழமை வந்து சோதனையில் ஈடுபட்டனா். கடந்த சில மாதங்களாக இந்த அலுவலகத்தின் கீழ் நடைபெற்றுள்ள பணப்பரிமாற்ற விவரங்கள், ஆவணங்களை ஆய்வு செய்தனா். நண்பகலில் வந்த அதிகாரிகள் தொடா்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக இரவு வரை சோதனையில் ஈடுபட்டனா்.

ஏற்கெனவே கடந்த வியாழக்கிழமை இரவு திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வருமான வரித்துறையினா் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.