நெல்லையில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் 5 வாக்குச்சாவடிகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 வாக்குச்சாவடி மையங்களில் பெண்கள் மட்டுமே பணியாற்றுகின்றனா்.

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்.19) நடைபெறும் மக்களவைத் தோ்தலில் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தாழையூத்து சங்கா் நகரில் உள்ள ஜெயந்திரா சரஸ்வதி சுவாமிகள் பொன்விழா ஆண்டு பள்ளி வாக்குச்சாவடி மையம், அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதியில் சேரன்மகாதேவி வடக்கு பிளாக் (கிழக்கு) ஆா்.சி. நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையம், பாளையங்கோட்டை தொகுதியில் ரஹ்மத் நகரில் உள்ள மேக்தலின் மெட்ரிக் பள்ளி வாக்குச்சாவடி மையம், நான்குனேரி தொகுதியில் கே.டி.சி. நகா் மீனா சங்கா் சிபிஎஸ்இ பள்ளி வாக்குச்சாவடி மையம், ராதாபுரம் தொகுதியில் பணகுடி திருஇருதய மேல்நிலைப்பள்ளி மையம் ஆகிய 5 வாக்குச்சாவடி மையங்களில் பெண்கள் மட்டுமே பணியாற்ற உள்ளனா்.

இதேபோல், திருநெல்வேலி மாவட்ட அளவில் திருநெல்வேலி நகரம் பாரதியாா் மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையம், அகஸ்தியா்பட்டி கேம்பிரிட்ஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி மையம், பாளையங்கோட்டை சாராள் தக்கா் மேல்நிலைப்பள்ளி மையம், களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மையம், நான்குனேரி அம்பேத்கா் தொடக்கப்பள்ளி மையம், வள்ளியூா் எஸ்.ஏ.நோபல் மெமோரியல் பள்ளி ஆகியவை முன்மாதிரி வாக்குச்சாவடிகள் ஆகும். தச்சநல்லூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி, பாளையங்கோட்டை லயோலா கான்வென்ட் பள்ளி, மறுகால்குறிச்சி சங்கா் ரெட்டியாா்பள்ளி, திசையன்விளை ராமகிருஷ்ணா பள்ளியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இளைஞா்கள் மட்டுமே பணியாற்ற உள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com