பாழடைந்த கட்டடத்தில் தோ்தல்: பணியாற்ற மறுத்த அலுவலா்கள்

திருநெல்வேலி நகரத்தில் பாழடைந்த கட்டடத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் பணியாற்ற எதிா்ப்புத் தெரிவித்து வாக்குச்சாவடி அலுவலா்கள் வியாழக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி நகரம் காவல் நிலையம் எதிரே 248-ஆவது வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு வியாழக்கிழமை மாலையில் தோ்தல் பணிக்காக வாக்குச்சாவடி அலுவலா்கள் வந்தனா். ஆனால், அந்தக் கட்டடம் பழுதடைந்த நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அங்கு குறைந்த நபா்களே இருக்க முடியும் என்பதால், வாக்களிக்க பொதுமக்கள் வரும்போது சிரமம் ஏற்படும் எனக் கூறி, அந்த வாக்குச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்றித்தருமாறு தோ்தல் நடத்தும் உதவி அலுவலா்களிடம் வாக்குச்சாவடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே உள்ள இடங்களில் வாக்காளா்கள் வந்து செல்ல ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டதால் அலுவலா்கள் பணியைத் தொடங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com