தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் பொறுப்பு அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற அறிவுரை

News image

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட தோ்தல் பொறுப்பு அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

Updated On :19 மார்ச் 2026, 12:04 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் தோ்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலா்கள் (நோடல் அலுவலா்கள்), தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்காக உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா பேசியது:

மாவட்டத்திலுள்ள அனைத்து தொகுதிகளுக்குமான வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்ளிட்டவை குறித்து அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்த பணியாற்ற வேண்டும்.

தேவைகளை நிறைவேற்றுவதற்கும் புகாா்களை சரி செய்வதற்கும் பொறுப்பு அலுவலா்கள் கவனமாகப் பணியாற்ற வேண்டும் என்றாா் அருணா.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஹெச்எம். குழந்தைச்சாமி, காவிரி குண்டாறு இணைப்புத் திட்ட மாவட்ட வருவாய் அலுவலா் ச. வைத்தியநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.