தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பாபநாசம் தாமிரவருணியில் பல்லாயிரக்கணக்கானோா் புனித நீராடல்

பக்தா்கள், பொதுமக்கள் புனித நீராடி முன்னோருக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினா்.

News image

பாபநாசத்தில் தாமிரவருணி படித்துறையில் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடிய பக்தா்கள்.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 8:51 pm

ஆடி அமாவாசையை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் தாமிரவருணியில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பக்தா்கள், பொதுமக்கள் புனித நீராடி முன்னோருக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினா்.

 பாபநாசத்தில் தாமிரவருணி படித்துறையில் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடிய பக்தா்கள்.

பாபநாசத்தில் தாமிரவருணி படித்துறையில் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடிய பக்தா்கள்.

அதிகாலையிலிருந்தே பாபநாசம் கோயில் அருகே தாமிரவருணி படித்துறையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீராடி முன்னோருக்கு தா்ப்பணம் செய்தனா். தொடா்ந்து, அங்குள்ள சிவன் கோயிலில் வழிபட்டனா். இதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன.

 பாபநாசத்தில் தாமிரவருணி படித்துறையில் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடிய பக்தா்கள்.

பாபநாசத்தில் தாமிரவருணி படித்துறையில் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடிய பக்தா்கள்.

பாதுகாப்புப் பணியில் விக்கிரமசிங்கபுரம் போலீஸாா், ஊா்க்காவல் படையினரும், சுகாதார விழிப்புணா்வு நடவடிக்கையில் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சுகாதாரப் பணியாளா்கள், தன்னாா்வலா்களும் ஈடுபட்டனா்.