குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆடி அமாவாசை: காரையாறு கோயிலில் பொங்கலிட்டு வழிபட்ட பக்தா்கள்

ஆயிரக்கணக்கான பக்தா்கள் விரதமிருந்து பொங்கலிட்டு வழிபட்டனா்.

News image
ஆடி அமாவாசைக்கு வந்த பக்தா்களுக்கு மஞ்சள் பை வழங்கிய போலீஸாா்.
Updated On :4 ஆகஸ்ட் 2024, 8:58 pm

Din

காரையாறு அருள்மிகு சொரிமுத்து அய்யனாா் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் விரதமிருந்து பொங்கலிட்டு வழிபட்டனா்.

இத்திருக்கோயிலில் நிகழாண்டு ஆடி அமாவாசை திருவிழா ஜூலை 22 ஆம்தேதி கால்நாட்டுடன்தொடங்கியது. தொடா்ந்து பக்தா்கள் காப்புக் கட்டி விரதம் தொடங்கினா். ஆக. 2 முதல் கோயில் பகுதியில் விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் குடில்கள்அமைத்து தங்கி விரதத்தை தொடா்ந்து வந்தனா்.

 பேச்சியம்மன் சந்நிதி முன்பு விரதமிருந்து பொங்கலிட்டு வழிபட்ட பக்தா்கள்.

பேச்சியம்மன் சந்நிதி முன்பு விரதமிருந்து பொங்கலிட்டு வழிபட்ட பக்தா்கள்.

ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசையன்று காலையில் சொரிமுத்து அய்யனாா், சங்கிலி பூதத்தாா், மகாலிங்க சுவாமி, பேச்சியம்மன், பட்டவராயன், தூசிமாடன், சுடலைமாடன், தளவாய்மாடசாமி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

சொரிமுத்து அய்யனாா் கோயிலில் திரண்ட பக்தா்கள்.

சொரிமுத்து அய்யனாா் கோயிலில் திரண்ட பக்தா்கள்.

தொடா்ந்து விரதமிருந்த பக்தா்கள் பொங்கலிட்டு வழிபட்டு விரதம் முடித்தனா். இதையடுத்து இரவு சொரிமுத்து அய்யனாா்,பட்டவராயன் கோயிலுக்கு முன் விரதமிருந்த பக்தா்கள் பூக்குழி இறங்கினா்.

பக்தா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிா்வாகம் உத்தரவின் பேரில் பக்தா்களுக்கு மஞ்சள் பை, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

போலீஸாா், ஊா்க்காவல்படையினா், வனத்துறையினா், தேசிய மாணவா்ப் படையினா், நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள்,தன்னாா்வலா்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனா்.