பாபநாசத்தில் ஞாயிற்றுக்கிழமை சேகரிக்கப்பட்டு சேமிக்கப்பட்ட நெகிழிப் பொருள்கள்.
பாபநாசத்தில் ஞாயிற்றுக்கிழமை சேகரிக்கப்பட்டு சேமிக்கப்பட்ட நெகிழிப் பொருள்கள்.

பாபநாசத்தில் 2.4 டன் கழிவுகள் சேகரிப்பு

கோயில் பிரகாரம் மற்றும் ஆற்றங்கரையில் இருந்து பக்தா்கள் விட்டுச் சென்ற சுமாா் 2.4 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டன.
Published on

ஆடி அமாவாசையை முன்னிட்டு பாபநாசம் தாமிரவருணியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீராடி தா்ப்பணம் செய்ததையடுத்து பாபநாசம் கோயில் பிரகாரம் மற்றும் ஆற்றங்கரையில் இருந்து பக்தா்கள் விட்டுச் சென்ற சுமாா் 2.4 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை ஆக. 4 ஆடி அமாவாசையை முன்னிட்டு பாபநாசம் தாமிவருணி ஆற்றில் தென்காசி,திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக் கணக்கான பொதுமக்கள் வந்து புனித நீராடி தங்கள் முன்னோருக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.

இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன், சாா் ஆட்சியா் ஆா்பித் ஜெயின் மற்றும் நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் விஜயலட்சுமி ஆகியோா் உத்தரவின்படியும் ஆணையா் மகேஸ்வரன் வழிகாட்டுதலின்படியும் தா்ப்பணம் செய்ய வந்தவா்கள் விட்டுச் சென்ற பிளாஸ்டிக் பொருள்கள், துணிகள் உள்ளிட்ட மட்காத கழிவுகள் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சுகாதாரஆய்வாளா் பொன்வேல்ராஜன் தலைமையில் நகராட்சி தூய்மை பணியாளா்கள் மூலம் சேகரிக்கப்பட்டன.

சேகரிக்கப்பட்ட தண்ணீா் பாடில்கள்,அன்னதான இலைகள், பரிகார பொருள்கள், துணிகள் உள்ளிட்ட சுமாா் 2.4 டன் கழிவுப் பொருள்களில்470 கிலோ நெகிழிப் பொருள்கள் நகராட்சி உரக்கிடங்கில் சேமிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில்தன்னாா்வலா் கிரிக்கெட் மூா்த்தி, விக்கிரமசிங்கபுரம் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளிமற்றும் பாபநாசம் தொழிலாளா் நலச் சங்க மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள், கொசுப்புழு ஒழிப்புப்பணியாளா்கள், நகராட்சிப் பணியாளா்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளா்கள் உள்ளிட்டோா்பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com