கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வனவிலங்கு வேட்டை: இருவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

வேட்டை நாய்களைக் கொண்டு வனவிலங்குகளை வேட்டையாடியதாக 2 பேருக்கு வனத் துறையினா் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 9:13 pm

Din

கடையம் பகுதியில் வேட்டை நாய்களைக் கொண்டு வனவிலங்குகளை வேட்டையாடியதாக 2 பேருக்கு வனத் துறையினா் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச் சரகம், கடையம் பீட்டுக்குள்பட்ட கரிசலூா் கிராமத்தில் வேட்டை நாய்களைக் கொண்டு சிலா் வனவிலங்குகளை வேட்டையாடுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், கடையம் வனச் சரக அலுவலா் து. கருணாமூா்த்தி தலைமையில் சிறப்புக் குழுவினா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, வனவிலங்குகளை வேட்டையாடியதாக ஆவுடையானூா் தங்கராஜா மகன் பழனிவேல்ராஜன் (30), கரிசலூா் கிருஷ்ணசாமி மகன் ஆனந்தகிருஷ்ணன் (24) ஆகிய இருவரையும் வனத் துறையினா் பிடித்தனா்.

அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் இளையராஜா உத்தரவுப்படி, இருவருக்கும் தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.