திருநெல்வேலி
திசையன்விளை பகுதியில் ஆக. 14இல் மின்நிறுத்தம்
காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை (ஆக. 14) காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, திசையன்விளை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் திசையன்விளை, மகாதேவன்குளம், இடையன்குடி, அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தான்மொழி பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என, வள்ளியூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் தா. வளன்அரசு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
