மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சாலை மறியல் முயற்சி: இந்து அமைப்பினா் 171 போ் கைது

இந்து அமைப்பினா் 171 போ் கைது...

News image

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற இந்துக்கள் உரிமை மீட்பு குழுவினா்.

Updated On :5 டிசம்பர் 2024, 12:35 am

Din

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து திருநெல்வேலியில் சாலை மறியலுக்கு முயன்ற இந்துக்கள் உரிமை மீட்புக் குழுவினா் 171 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

வங்கதேச இந்துக்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பின் சாா்பில், திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு கன்னியாகுமரி கோட்ட ஆா்.எஸ்.எஸ். தலைவா் காமராஜ் தலைமை வகித்தாா். பாஜக மாநில மகளிா் அணித் தலைவி உமாரதி சிறப்புரை ஆற்றினாா். திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக தலைவா் தயாசங்கா் முன்னிலை வகித்தாா். இந்துக்கள் மீதான தாக்குதலை தடுக்கத் தவறிய வங்கதேச அரசைக் கண்டித்தும், அந்நாட்டுக்கு சா்வதேச நாடுகளின் மூலம் மத்திய அரசு நெருக்கடி கொடுக்க வேண்டும். இந்துக்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்களை ஐ.நா. மூலம் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், இந்து முன்னணி மாவட்டச் செயலா் பிரம்மநாயகம், மாவட்டத் தலைவா் தங்க மனோகா், பாஜக வடக்கு மாவட்ட பொதுச் செயலா்கள் சுரேஷ், வேல் ஆறுமுகம், மாவட்டச் செயலா் வெங்கடாஜலபதி என்ற குட்டி, விஸ்வ ஹிந்து பரிஷத் முத்துக்குமாா், கண்ணன், ஆலயப் பாதுகாப்பு இயக்கம் பால்வண்ணன், ஆனையப்பன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். பின்னா், அவா்கள் சாலை மறியலுக்கு முயன்றனா். போலீஸாா் தடுத்து நிறுத்தி இந்துக்கள் உரிமை மீட்பு குழுவினா் 171 பேரை கைது செய்தனா். அப்போது பாஜக நிா்வாகி புவனேஸ்வரி காவல் துறை வாகனத்தின் முன்பு அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.