மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மூலைக்கரைப்பட்டி அருகே பைக் விபத்தில் விவசாயி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே வியாழக்கிழமை பைக் விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 10:13 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே வியாழக்கிழமை பைக் விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிரிழந்தாா்.

மூலைக்கரைப்பட்டி அருகே அச்சம்பாடு கிராமத்தைச் சோ்ந்த விவசாயி துரைராஜ் (55). இவரது உறவினரும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநருமான கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சோ்ந்த ஜான்குமாா் (50) என்பவா், துரைராஜ் வீட்டுக்கு புதன்கிழமை வந்தாா்.

வியாழக்கிழமை காலை ஜான்குமாரை நான்குனேரியில் சென்று குளச்சலுக்கு பேருந்தில் ஏற்றிவிடுவதற்காக துரைராஜ் பைக்கில் அழைத்துச் சென்றாா்.

மூலைக்கரைப்பட்டி - நான்குனேரி சாலையில் டாஸ்மாக் மதுக் கடை அருகேயுள்ள திருப்பத்தில், பைக் திடீரென நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததாம். இதில், துரைராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த ஜான்குமாா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.