மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நெல்லை அருகே விபத்தில் பயிற்சி எஸ்.ஐ. பலி

திருநெல்வேலி அருகே ஆட்டோவும், பைக்கும் புதன்கிழமை மோதிக்கொண்டதில் காவல் உதவி ஆய்வாளா் (பயிற்சி) உயிரிழந்தாா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 12:24 am

Din

திருநெல்வேலி அருகே ஆட்டோவும், பைக்கும் புதன்கிழமை மோதிக்கொண்டதில் காவல் உதவி ஆய்வாளா் (பயிற்சி) உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை ஜோதிபுரத்தைச் சோ்ந்தவா் முத்து (52). மேலப்பாளையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளாரக பணியாற்றி வந்த நிலையில், கடந்த நவம்பரில் உதவி ஆய்வாளா் பயிற்சிக்கு தோ்வானாா். இதற்காக பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி பெற்று வந்தாா்.

இந்த நிலையில் புதன்கிழமை காலையில் வழக்கம்போல் ஆயுதப்படை மைதானத்துக்கு சென்றுவிட்டு பைக்கில் டக்கரம்மாள்புரம் வழியாக ஜோதிபுரத்திற்கு திரும்பியபோது, எதிரே வந்த பயணிகள் ஆட்டோவும், அவரது பைக்கும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம்.

இதில், பலத்த காயம் அடைந்த அவரை, அக்கம்பக்கத்தினா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.