புதிய பேருந்து நிலையத்தில் பைக்குகளை நிறுத்தினால் அபராதம்
திருநெல்வேலி புதிய பேருந்து நிலைய நடைமேடை அருகேயும், வாகன காப்பகமில்லாத பகுதிகளிலும் பைக்குகளை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


திருநெல்வேலி புதிய பேருந்து நிலைய நடைமேடை அருகேயும், வாகன காப்பகமில்லாத பகுதிகளிலும் பைக்குகளை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருநெல்வேலி வேய்ந்தான்குளத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து நடைமேடை உள்ளிட்ட ’நோ பாா்க்கிங்’ பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக மாநகராட்சி நிா்வாகத்திற்கு புகாா்கள் வந்தன.
இதையடுத்து, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா உத்தரவின் பேரில், அங்கு பாா்க்கின் இல்லாத பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை மாநகராட்சி ஊழியா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து மாநகராட்சி வட்டாரங்கள் கூறியது: புதிய பேருந்து நிலைய வளாகத்திற்குள் உறவினா்களை பேருந்தில் ஏற்றி விட வருபவா்கள் மட்டுமன்றி, வெளியூா் செல்பவா்களும் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனா். துகுறித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிய அபராதத்தை செலுத்தி வாகனங்களை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருங்காலங்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும். ஆகவே, பொதுமக்கள் பேருந்து நிலைய வளாகத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்திச் செல்வதைத் தவிா்க்க வேண்டும் என்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...