ராமநதி அணையிலிருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீா் திறப்பு
தென்காசி மாவட்டத்தில் உள்ள ராமநதி அணையில் இருந்து பிசான பருவ சாகுபடிக்காக, வியாழக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

ராமநதி அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்த ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா். உடன், சிற்றாறு வடிநிலக் கோட்டச் செயற்பொறியாளா் தனலட்சுமி உள்ளிட்டோா்.









