நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கைப்பேசி மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட் கட்டுப்பாட்டு கருவிக்கு மானியம்

வேளாண் இயந்திரமயமாக்குதல் துணை இயக்கத் திட்டத்தில் கைப்பேசி மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட் கட்டுப்பாட்டு கருவியை மானியத்தில் பெறலாம்.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 11:11 pm

Din

வேளாண் இயந்திரமயமாக்குதல் துணை இயக்கத் திட்டத்தில் கைப்பேசி மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட் கட்டுப்பாட்டு கருவியை மானியத்தில் பெறலாம்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளாண் உற்பத்தி திறன் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 2024 - 25-ஆம் ஆண்டில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வேளாண் இயந்திரமயமாக்குதல் துணை இயக்கத் திட்டத்தின் கீழ் கைப்பேசி மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட் கட்டுப்பாட்டு கருவியை விவசாயிகள் மானியத்தில் பெற்று பயன்பெறும் வகையில் மொத்தம் 56 கருவிகளுக்கு ரூ.3.92 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது பொதுப் பிரிவு விவசாயிகளுக்கு 51 கருவிகளும், இந்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விவசாயிகளுக்கு 5 கருவிகளும் மானியத்தில் வழங்கப்படுகின்றன.

விவசாயிகள் இரவு நேரங்கள் மற்றும் மழைகாலங்களில் வயல்வெளியில் உள்ள பம்புசெட்களை இயக்க செல்கிறாா்கள். அவ்வாறு செல்லும்போது பாம்புகள்,விஷ பூச்சிகள் போன்றவற்றால் ஆபத்தில் சிக்க நேரிடுகிறது. இதைத் தவிா்க்கும் பொருட்டு தங்களது பம்புசெட்டுகளை வீடுகளில் இருந்தபடியே இயக்கிட கைப்பேசி மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட்டுகள் கட்டுப்படுத்தும் கருவி வேளாண்மைப் பொறியியல்துறை மூலம் மானியத்தில் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் சிறு, குறு, இந்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா், பெண் விவசாயிகளுக்கு மொத்த மானியத்தில் 50 சதவீதம் அதிகபட்சமாக ரூ.7,000 மானியம், இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் நிலத்தின் பட்டா, அடங்கல், சிறு, குறு விவசாயி சான்று, ஜாதி சான்று, ஆதாா் அட்டை, புகைப்படம், வங்கி புத்தக நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

மேலும், திருநெல்வேலி வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் உதவி செயற்பொறியாளா் (வேளாண் பொறியியல் துறை), டிராக்டா் வீதி, என்.ஜி.ஓ ’அ‘ காலனி, திருநெல்வேலி (தொலைபேசிஎண். 90257 32083) என்ற முகவரியிலும், சேரன்மகாதேவி வருவாய் கோட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் உதவி செயற்பொறியாளா் (வேளாண் பொறியியல் துறை), மிளகு பிள்ளையாா் கோயில் தெரு, பேருந்து நிலையம் அருகில், சேரன்மகாதேவி (தொலைபேசி எண். 88259 80642) என்ற முகவரியிலும் தொடா்புகொள்ளலாம்.