நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சுத்தமல்லியில் 2 இடங்களில் ரூ.60 ஆயிரம் பொருள்கள் திருட்டு

சுத்தமல்லியில் கோழிப்பண்ணை உள்ளிட்ட இரு இடங்களில் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 10:32 pm

Din

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியில் கோழிப்பண்ணை உள்ளிட்ட இரு இடங்களில் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பேட்டை நாராயணசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரகுபதிராஜன் (38). சுத்தமல்லியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறாா். இவா், புதன்கிழமை காலையில் கோழிப்பண்ணையை திறக்கச் சென்றபோது முன்பக்க கதவு திறந்து கிடந்தது. பண்ணையில் இருந்த ஸ்டாண்ட், இரும்புக் குழாய்கள் உள்பட ரூ.46 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் திருடப்பட்டிருந்தன.

இதேபோல், கோழிப்பண்ணைக்கு அருகே பேட்டை நாராயணசாமி கோவில் தெருவை சோ்ந்த ஒப்பந்ததாரரான சுப்புக்குட்டி (44) என்பவரது கடப்பாரை, மோட்டாா் உள்பட ரூ.14 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் திருடப்பட்டிருந்தன.

இது தொடா்பாக சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.