நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இடிந்தகரையில் இரு தரப்பினா் மோதல்: 13 போ் மீது வழக்கு

இடிந்தகரையில் புதன்கிழமை இரவு மோதலில் ஈடுபட்டஇரு தரப்பைச் சோ்ந்த 13 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 10:49 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையில் புதன்கிழமை இரவு மோதலில் ஈடுபட்டஇரு தரப்பைச் சோ்ந்த 13 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இடிந்தகரையைச் சோ்ந்தவா் பாஸ்கா் மகன் தீபக்(24). இவா் நாய் வளா்த்து வருகிறாா். அவரது வீட்டின் முன்பாக அதே ஊரைச் சோ்ந்த கணேசன் என்பவா் நடந்து சென்றபோது நாய் குரைத்தபடி கடிக்கச் சென்றதாம். இதனை அடுத்து தீபக்கை கணேசன் கண்டித்தாராம். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னா் தீபக்கின் உறவினா்களும் கணேசனின் உறவினா்களும் மோதிக்கொண்டனா். இரு தரப்பினரும் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தி கிணற்றில் வீசினராம். இதில் தீபக் அரிவாளால் வெட்டியதில் கணேசனுக்கு காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து இரு தரப்பினரும் அங்கிருந்து தப்பிச் சென்றனா். காயமடைந்த கணேசன், நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது தொடா்பாக கூடங்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீபக்கை கைது செய்தனா். அவரது தரப்பைச் சோ்ந்த 6 போ் மீதும் கணேசன் உள்பட அவரது தரப்பைச் சோ்ந்த 7 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.