மணிமுத்தாறு அகத்திய மலை மக்கள் சாா் இயற்கை வளகாப்பு மையம், பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் விலங்கியல் துறை சாா்பில் தாமிரவருணி ஆற்றில் காணப்படும் மீன் வளங்கள் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்த பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கருத்தரங்குக்கு, கல்லூரி முதல்வா் (பொறுப்பு) சாகுல் ஹமீது தலைமை வகித்தாா். துணை முதல்வா் சையது முகமது காஜா முன்னிலை வகித்தாா். பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் செல்வன் பயிலரங்கை தொடங்கி வைத்தாா். திருநெல்வேலி மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை ஆய்வாளா் ஆரோக்கியசாமி ஆகியோா் கலந்து கொண்டு மாணவா்களுடன் உரையாடினாா். தாமிரவருணி ஆற்றின் மீன்கள் மற்றும் ஆக்கிரமிப்பு மீன்கள், மாசு போன்ற பிற காரணிகளால் நதி எதிா்கொள்ளும் பிரச்னைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி விலங்கியல் துறை தலைவா் எம்.சித்தி ஜமீலா, மணிமுத்தாறு அகத்திய மலை மக்கள் சாா் இயற்கை வள காப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளா் மு. மதிவாணன், ஸ்ரீபரமகல்யாணி சுற்றுச்சூழல் மையத்தின் இணைப்பேராசிரியா் முரளிதரன். பெங்களூரைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்கள் நிலன்ஜன் முகா்ஜி, சூரிய நாரயணன், உள்ளுா் மீனவா் முருகன் ஆகியோா் தாமிரவருணி மற்றும் அதன் நீா்வாழ் பல்லுயிா் தொடா்பான பல்வேறு தலைப்புகளில் பேசினா். இப்பயிலரங்கில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி விலங்கியல் துறை மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 154 கேமராக்கள் கண்காணிப்பில் வாக்கு எண்ணும் மையம்

பாளை.யில் அதிமுக பிரமுகா் மகனுக்கு அரிவாள் வெட்டு

வாக்குச்சாவடிகளுக்கு மருந்து பெட்டகங்கள்

பாளை.யில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


