உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

நெல்லை அரசு சட்டக் கல்லூரிக்கு பள்ளி மாணவிகள் களப்பயணம்

திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரிக்கு பள்ளி மாணவிகள் வெள்ளிக்கிழமை களப்பயணம் வந்தனா்.

News image
Updated On :23 பிப்ரவரி 2024, 7:05 pm

திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரிக்கு பள்ளி மாணவிகள் வெள்ளிக்கிழமை களப்பயணம் வந்தனா். ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு பல்வேறு பயிலரங்குகள், உயா்கல்வி நிறுவனங்களுக்கு களப்பயணம் சென்று வருகிறாா்கள். அதன்படி, திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரிக்கு முனைஞ்சிபட்டி, நான்குனேரி, மூலைக்கரைப்பட்டி, மறுகால்குறிச்சி, தளபதிசமுத்திரம் பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெள்ளிக்கிழமை வந்தனா். சட்டக்கல்வி விளக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் லதா தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் சண்முக சுந்தரம், நாராயணி, பேராசிரியா்கள் சோமசுந்தரம், சண்முகசுந்தரம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.