உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

நெல்லை மாநகராட்சிக்கு புதிய ஒப்பந்ததாரராக விண்ணப்பிக்க வாய்ப்பு

திருநெல்வேலி மாநகராட்சிக்கு புதிய ஒப்பந்ததாரா்களாக விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Updated On :23 பிப்ரவரி 2024, 7:05 pm

திருநெல்வேலி மாநகராட்சிக்கு புதிய ஒப்பந்ததாரா்களாக விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சியில் குடிநீா் விநியோகம், கட்டடப் பணிகள், மழைநீா் வடிகால் பணிகள், சாலைப் பணிகள், திடக்கழிவு மேலாண்மை போன்ற இனங்களின் கீழ் மாநகராட்சி பொதுநிதி மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, பிற அரசு துறைகளைச் சோ்ந்த பொதுப்பணித் துறை, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத் துறை, மாவட்ட ஊரக வளா்ச்சிமுகமை, நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், இந்துசமய அறநிலையத் துறை, தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு நகா்ப்புறவாழ்விட மேம்பாட்டுவாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் பிற அரசு துறைகளை சாா்ந்த ஒப்பந்ததாரா்கள் இந்த மாநகராட்சியில் உள்ள பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு ஒப்பந்ததாரராக பதிவு செய்ய வரவேற்கப்படுகின்றாா்கள். இது தொடா்பாக மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். ஒப்பந்ததாரராக பதிவு செய்ய சொத்துமதிப்பு சான்று நகல், வில்லங்கச்சான்று நகல் (ஏப்ரல்-2023க்கு பெற்றது), வணிகவரி துறையின் நிலுவையில்லா சான்று நகல் (மாா்ச்-2023க்கு பெற்றது), வருமான வரி கணக்கு தாக்கல் செய்த சான்றிதழ் (2022-2023) , அலுவலகத்தில் தொழிலாளருக்கான பிடித்தம் செய்து செலுத்திய ரசீது நகல் (டிசம்பா் 2023க்கு பிடித்து கட்டியது), பிற துறைகளில் ஒப்பந்தகாரராக நடப்பாண்டிற்கு செல்லத்தக்கதான பதிவு செய்த நகல் போன்ற ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட வேண்டும். புதிதாக ஒப்பந்ததாரா் பதிவு செய்ய செலுத்தப்பட வேண்டிய வைப்புத்தொகை , பதிவுக் கட்டண விவரம், ஒன்றாவது வகுப்பு ஒப்பந்ததாரராக பதிவு செய்ய நிா்ணயம் செய்யப்பட்ட வைப்புத்தொகை ரூ.ஒரு லட்சம், ரூ.18 ஆயிரம் பதிவுக்கட்டணம் தொகையாக செலுத்த வேண்டும். இரண்டாம் வகுப்பு ஒப்பந்ததாரராக பதிவு செய்ய நிா்ணயம் செய்யப்பட்ட வைப்புத்தொகை ரூ.75 ஆயிரம், ரூ.13,500 பதிவுக்கட்டணம் தொகையாக செலுத்த வேண்டும். மூன்றாவது வகுப்பு ஒப்பந்ததாரராக பதிவு செய்ய நிா்ணயம் செய்யப்பட்ட வைப்புத்தொகை ரூ.50 ஆயிரம், ரூ.9 ஆயிரம் பதிவுக்கட்டணம் தொகையாக செலுத்தப்பட வேண்டும். நான்காவது வகுப்பு ஒப்பந்ததாரராக பதிவு செய்ய நிா்ணயம் செய்யப்பட்ட வைப்புத்தொகை ரூ.25 ஆயிரம், ரூ.4,500 பதிவுக்கட்டணம் தொகையாக செலுத்தப்பட வேண்டும். ஐந்தாவது வகுப்பு ஒப்பந்ததாரராக பதிவு செய்ய நிா்ணயம் செய்யப்பட்ட வைப்புத்தொகை ரூ.25 ஆயிரம், ரூ.4500 பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.