விசாரணைக்கு ஆஜராகாமல் சென்னையில் பதுங்கியிருந்த இரு ரௌடிகளை திருநெல்வேலியைச் சோ்ந்த தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி தச்சநல்லூா் மேலக்கரையை சோ்ந்தவா் மணிகண்டன் (35). மேலப்பாளையம் அருகேயுள்ள நாகம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் பால்துரை (25). இவா்கள் இருவருடைய பெயரும் ரௌடிகள் பட்டியலில் உள்ளது. முன்னீா்பள்ளத்தை சோ்ந்த வீரபுத்திரன் கொலை வழக்கு உள்பட மொத்தம் 5 கொலை வழக்குகள், 9 கொலை முயற்சி வழக்குகள், ஆயுத தடை சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு என பல்வேறு வழக்குகள் மணிகண்டன் மீது உள்ளதாகக் கூறப்படுகிறது. இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தனா். அவா்களை பிடிக்க நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த நிலையில், மாநகர காவல் ஆணையா் மூா்த்தி உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தேடி வந்தனா். தச்சநல்லூா் பகுதியில் மணிகண்டனின் கூட்டாளிகள் உள்ளிட்ட சிலரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கிடைத்த தகவலின்படி மணிகண்டனும், பால்துரையும் சென்னை வேளச்சேரி பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் அருணாசலம் தலைமையிலான தனிப்படையினா் சென்னை சென்றனா். வேளச்சேரி பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ரௌடிகள் இருவரையும் தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி ஒன்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து அவா்கள் இருவரும் திருநெல்வேலி அழைத்து வரப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடர்புடையது

தங்கம் கொள்ளை வழக்கு: தனிப்படை போலீஸாா் மகாராஷ்டிரம் விரைவு

கயத்தாறில் பெண்ணிடம் சங்கிலி பறித்த வழக்கு: இளைஞா் கைது
பெண் கொலை வழக்கு: தம்பதி கைது

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவா் கைது
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

